கல்விக்கு கரம் கொடுக்கும் வெண்கரம் அமைப்பினால், க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான செயன்முறை கையேடுகள் “முயன்று தவறிக் கற்றல்” எனும் தொனிப் பொருளில் ஆசிரிய வளவாளர்களால் தயாரிக்கப்பட்டு பரீட்சை பிரிவினரால் வெளியிடப்பட்டது.
கணிதம் ,தமிழ், வரலாறு, சமயம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைக் கையேடுகள் வலிகாமம், யாழ்ப்பாணம் கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
தவணைப் பரீட்சையில் 20 – 40 வரையான புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களது கற்றல் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் இலக்குடன் மூன்று மாத கால பயிற்சி நெறியாக இச்செயன்முறைக் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
செயன்முறைக் கையேடுகளை வழங்கும் நிகழ்வு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர்களான திரு இ. சிறீதரன் (அதிபர் ), திரு. பங்கிராஸ் (ஓய்வுநிலை அதிபர்) திரு. மு.கோமகன், எம்.பிரபாகரன், திருமதி சா.ஜீவதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி கையேடுகளை கையளித்தனர்.
இச்செயற்பாட்டை பெரிதும் வரவேற்கும் அதிபர்களும் ஆசிரியர்களும், விஞ்ஞான பாட செயல்முறை கையேடு தயாரிப்பதற்கான கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.