பதுளை, கிராந்துருகோட்டை பிரதேசத்தில் தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தர் சீட்டுகளின் இலக்கங்களுக்கு பணம் பந்தயம் வைத்ததாக கூறப்படும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டை மற்றும் ஜயமாவத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42, 43 மற்றும் 48 மூன்று பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.