வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பகுதியில்
தொல்பொருட்களை தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26, 32 மற்றும் 56 வயதுடைய வெலிமடை மற்றும் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.