காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடத்திய “பரிந்துரை பயணத்தின் கதைகள்” எனும் அனுபவம் பகிர்வு நிகழ்வானது நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபையினர் கடந்த மூன்று மாதங்களாக இணைந்து நடத்திய பல்வேறுபட்ட பரிந்துரை சார்பான அனுபவக் கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதோடு தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி திட்டங்கள் மற்றும் அரச சேவைகள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு யுக்திகளில் பிரபலங்கள், சமய தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நடாத்திய பல்வேறு கலந்துரையாடல்கள் பற்றிய அனுபவங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது .
நிகழ்வில் மாற்று மக்கள் சபை, காவேரி கலா மன்ற ஊழியர்கள், சமூக மட்டத்திலான அமைப்புகளான தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கம் என்பன கலந்து கொண்டதோடு, ஊடகவியலார்களும் கலந்து கொண்டனர். மேலும் காவேரி கலா மன்ற இயக்குனர் வண டி.எஸ். யோசுவா அவர்கள் நிகழ்வுக்கு தலைமையேற்றார்.
சமூகம் மட்ட நிறுவனங்கள் தாங்கள் எப்படி தங்களது தனிமனித வாழ்க்கையில் பரிந்துரை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகின்றார்கள், என்பதோடு எப்படி சமூகத்திற்காக பரிந்துரை செய்யலாம் எனும் அடிப்படையில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டதோடு தங்களது எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் திட்ட முன்வைப்புகளை முன் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து காவேரி கலா மன்ற ஊழியர்கள் தாங்கள் கடந்த மூன்று மாதங்களாக நடைமுறைப்படுத்திய பல்வேறுபட்டு தொழு நோயாளர் நலன்புரி சார்ந்த பரிந்துரைகள் அவற்றின் சாதனைகள் அனுபவக் கதைகள் மற்றும் அக்டோபர் மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரையிலான சந்திப்புகள், திட்ட அட்டவணை என்பனவற்றை சமர்ப்பித்ததோடு
சமூக மட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு பரிந்துரை
என்றால் என்ன பரிந்துரை எவ்வாறு அமைய வேண்டும் அதன் வகைகள் மற்றும் எப்படி ஒரு சிறப்பான பரிந்துரையை செய்வது என்பது தொடர்பான விளக்கத்தையும் வழங்கினர்.