Browsing: யாழ் செய்திகள்

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெற்றது. குறித்த இசைநிகழ்ச்சியில் முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்கள். இதன்போது பார்வையாளர்கள்கள் தடைகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென […]

சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீற்றர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு, கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார். அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதீப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் கொடிகாமம் தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா […]

தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் பல கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற, விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் அமிழ்த்தி குளிர்காய விரும்பும் சுயநலத் தரப்புக்களுக்கு வாய்ப்பாக மாறிவிடும் எனவும் வருத்தம்  தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று(09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய திரைப்  பிரலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக கடற்றொழில் […]

யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 07 குடியிருப்பாளர்களுக்கு தலா 20, 000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து, டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கொக்குவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது, டெங்கு நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த 07 பேருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை (07) […]

எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான். ஆனால் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எந்தக் காலத்திலும் அலைந்தவர்கள் அல்லர். இப்போது ’முற்றவெளியில் முதன்முறையாக ‘ என்ற அறிவிப்புடன், ஏதோ கலையுணர்வே அற்ற ஜென்மங்களுக்காக , மனமிரங்கி வந்திருப்பதாகவே ஹரிகரன் இசைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு ஈழத்தவர். புலம்பெயர் பணக்காரர்களில் […]

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு […]

விவசாயத் திணைக்களம் அதிக பருவத்தில் அரசினால் நெல் கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச விலையை வழங்கியுள்ளது. மேலும் 14 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நாட்டு அரிசி கிலோவுக்கு ரூ.105 ஆகவும், சம்பா அரிசி கிலோ ரூ.120 ஆகவும், கீரி சம்பா அரிசி கிலோ ரூ.130 ஆகவும் குறைந்தபட்ச விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின் கூற்றுப்படி, 14 சதவீத ஈரப்பதத்திற்கு மேல் உள்ள நாட்டு அரிசியின் குறைந்தபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.90 ஆகவும், சம்பா நெல் ஒரு கிலோவுக்கு […]

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது