Browsing: யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்ட விரோத தொழிலாளர்களால் நேற்று இரவு மாத்திரம் 30 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான சிறிய மீன்கள் பிடித்து அழிக்கப்பட்டுள்ளது. ஐம்பது படகுகளுக்கும் மேல்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் இன்று நீண்ட விவாதங்கள் இடம்…

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளைப் பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(04.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது, பருத்தித்துறை, தும்பளை பகுதியைச் சேர்ந்த…

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி ஒன்று முப்பது மணி 1.30 அளவில் 15க்கு மேற்பட்ட ஆயுத குழுக்கள் வீட்டு உரிமையாளர்…

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மயிலிட்டி திருப்பூர் […]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பயனாளிகளுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்று பிற்பகல் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், யாழ்ப்பாண இந்திய தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன், யாழ்.மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

யாழ் இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம்(14)   இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்த 6 மாத குழந்தையின் உடல் இன்றையதினம் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 14 ஆம் திகதி மாலை  யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் ஹயஸ் வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. […]

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்புடன் இன்றையதினம் (16) இடம்பெறுகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இக்கூட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கூட்டத்தில் […]