27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

நள்ளிரவில் டிப்பர் திருடியவர்கள் தப்பி ஓட்டம் 

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் கடந்த இரண்டாம் திகதி ஒன்று முப்பது மணி 1.30 அளவில் 15க்கு மேற்பட்ட ஆயுத குழுக்கள் வீட்டு உரிமையாளர் இல்லாத சமயம் வீட்டில் இருந்த பெண்களை கத்தி முனையில் மிரட்டி  வீட்டின் முன் மதில் மற்றும்கேற்று  கதவுகளை உடைத்துக்கொண்டு வீட்டின் உட்பகுதியில் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி அத்துமீறி எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளருக்கு மனைவியால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இச்சம்பவம் தொடர்பாக தருமபுர போலீசாருக்கு வீட்டு உரிமையாளர் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்த போலீசார் தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாட்டு பகுதியில் டிப்பர் பயணிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக துரத்திச் சென்ற பொழுது டிப்பர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் நடுவீதியில் டிப்பர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய நான்கு மோட்டார் சைக்கிளின் வீதியில் விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த டிப்பர் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிளையும் தருமபுர போலீசார் மீட்டுள்ளதுடன் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில் சம்பவம் தொடர்பாக தருமபுர போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக. தருமபுபொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர்களைஉடனடியாக கைது செய்து தமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

அத்துடன் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது தமது வீட்டில் இருப்பதற்கு தான் பெரும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தான் எந்தவித குற்ற செயலும் ஈடுபடாத நிலையில் தனக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை  தடயவியல் பொலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்.

User1

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.

User1

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!

User1

Leave a Comment