28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது? தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட தெரிவு செய்யப்பட்ட இரு வேட்பாளர்களில் இறுதியாக ஒருவரின் பெயரை தெரிவு செய்வதில் இன்று நீண்ட விவாதங்கள் இடம் பெற்ற நிலையில் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை பொது வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தமிழ் பொது வேட்பாளரை இறுதி செய்யும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.

தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்வதற்காக பல மணிநேரமாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆலோசனை நடத்திய போதும், பொது வேட்பாளரை இறுதி செய்ய முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று இன்று மாலை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்

User1

வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

User1

டெங்கு பரவும் சூழல். நீதிமன்றால் 07 பேருக்குத் தண்டம்…!

sumi

Leave a Comment