Browsing: மட்டக்களப்பு செய்திகள்

பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும்,…

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோர் மட்டக்களப்பு மருத்துவர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள்…

  மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.

ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவி முகம்மது இஸ்மாயில ரணா சுக்ரா, பூட்டான் நாட்டில் நடைபெற இருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார். இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றதன் அடிப்படையில், சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா, ஓட்டமாவடி 01 208பி/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் […]

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]

யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் […]

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(12) மீட்கப்பட்ட இச்சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து […]

தமிழ் மக்களின் போரட்டம் கருணா பிள்ளையானின் உச்சகட்ட பிரதேசவாதம் ஊடாக அழிக்கப்பட்டது அவ்வாறு மீண்டும் பிரதேசவாதம் ஊடாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அழித்து ஒழிப்பதற்காக செயற்பட்டுவரும் போலி முகங்களை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும். அதேவேளை சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கை பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்படவேண்டும் அதற்கு மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஊடக கற்கை வளநிலையத்தில் இன்று […]

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளன. பத்து யானைகள் அடங்கிய குறித்த யானைக் கூட்டம், இன்று புதன்கிழமை காலைவேளையில் அப்பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. அதேவேளை, அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களை துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.