Browsing: உலக செய்திகள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சிதீவு அகதிகளை நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறிய பின்னரும் அதே நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர், அகதிகள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமை பற்றிய அறிக்கைகள் வெளிவந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டு காயம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் […]

உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர். செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து கிட்டத்தட்ட 5,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான அறிக்கைகள் லண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் இருந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

  2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]

மரணம் நம்மை பிரிக்கும் வரை இணைபிரியா தம்பதிகளாக வாழ வேண்டுமென்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், முன்னாள் நெதர்லாந்து பிரதமர் ட்ரைஸ் வான் ஆக்ட் (Dries van Agt) மற்றும் அவரது மனைவி யூஜெனி (Eugenie) ஆகியோருக்கு கடந்த ஏழு தசாப்தங்களாக ஒன்றாக கழித்ததை போலவே ஒன்றாக இந்த வாழ்க்கையில் இருந்து விடைபெறுவது நோக்கமாக இருந்துள்ளது. இதன்படி, 93 வயதான இந்த தம்பதி இந்த மாதம் முதல் பகுதியில் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இருவரும் கைகோர்த்து இறந்ததாக […]

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (10) நடந்த கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில், எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையே நடந்த போட்டியில் போட்டியிட்டுள்ளார். அப்போது திடீரென மைதானத்தின் நடுவில் நின்ற அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹவாய் தீவுக் கூட்டத்தின் பிக் ஐலண்ட் பகுதியில் ரிக்டர் 5.7 அளவுகோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அந்தப் பகுதியில் நன்கு உணரப்பட்டுள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியதாக நிலையில், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘நான் தவறு செய்துவிட்டேன். அதனால்தான் ஜனாதிபதியாக இதுவே எனது கடைசி உரையாகும். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாததற்கு மன்னிக்கவும். “சிறு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பில் நான் […]

மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குவதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் மியன்மார் இராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. போராளிகள் அமைப்பு மற்றும் இராணுவ விரோத போாளிகளுடன் கடந்த சில மாதங்களாக […]