Browsing: உலக செய்திகள்

ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘நான் தவறு செய்துவிட்டேன். அதனால்தான் ஜனாதிபதியாக இதுவே எனது கடைசி உரையாகும். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாததற்கு மன்னிக்கவும். “சிறு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பில் நான் […]

மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கு இராணுவ சேவையை கட்டாயமாக்குவதாக அந்நாட்டு இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சதிப்புரட்சி மூலம் மியன்மார் இராணுவம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. போராளிகள் அமைப்பு மற்றும் இராணுவ விரோத போாளிகளுடன் கடந்த சில மாதங்களாக […]

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேலிய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹாமல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மகன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா நகரின் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக ஏற்கனவே 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் புதல்வரான 22 வயதான ஹசெம் ஹனியே என்பவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தின் […]

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிணை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர் சிறையில் இருக்க வேண்டியுள்ளது. இம்ரான் கானைத் தவிர, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் 13 குற்றச்சாட்டுகளில் பிணை பெற்றுள்ளார், ஆனால் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ரஷ்ய “பொது போக்குவரத்துக் கப்பல்கள்” மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் முயற்சியை முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துளளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் “அரை நீரில் மூழ்கக்கூடிய கடற்படை ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய சிவிலியன் போக்குவரத்துக் கப்பல்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்” என்று அழைக்கப்படும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறியது. ரஷ்ய ரோந்துப் படகுகள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலைத் தடுத்ததாகவும், ஒரு உக்ரேனிய கடற்படை ஆளில்லா விமானத்தை பீரங்கித் தாக்குதலால் அழித்ததாகவும், மீதமுள்ளவற்றை மின்னணுப் […]

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் கடந்த 8-ம் திகதி அந்நாட்டின் தேசிய அவைக்கும்(நாடாளுமன்றம்), மாகாண அவைகளுக்கும்(சட்டப்பேரவை) தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து, உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்றதால் வாக்கு எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று நண்பகல் […]

காசாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புல் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாக சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ”காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் இப்போது பசியுடன் உள்ளனர், மேலும் மக்கள் தங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் பாதுகாப்பற்ற தண்ணீரைக் கொண்டுள்ளனர்” என்று ஆக்ஷன் எய்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரஃபாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவது ” பேரழிவு விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துளளது. ஆக்‌ஷன் எய்ட் பாலஸ்தீனத்தின் […]

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று(08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதன்போது எரிமலையில் இருந்த பாரிய அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறியுள்ளது. நெருப்பு குழம்புகள் குறித்த எரிமலையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியுள்ளதுடன் இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]

ஐஸ்லாந்து – கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.