Browsing: உலக செய்திகள்

இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள். குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 […]

இலங்கையர்கள் தொழில் புரியும் தென்கொரியாவின் நாசு பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு தொழிற்புரிவதாகவும், தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அங்கு பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தேர்தல் வேட்பாளர்களை குறிவைத்து இன்று புதன்கிழமை இரு வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பலுசிஸ்தானின் பிஷினில் ஒரு சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிஷினின் கானோசாய் பகுதியில் உள்ள சுயேச்சை […]

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜெபஸ்டின் பினிரா ஹெலி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் […]

சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார். ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார். இணையத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள் பிரபலமாக உள்ளபோதும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணமாகாத பல இளையர்கள் தொடர்ந்து பாரம்பரிய திருமணத் தரகர்களையே சார்ந்திருப்பதாக அவர் […]

இங்கிலாந்து மன்னர் சார்ள்ஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னர் திங்களன்று ’வழக்கமான சிகிச்சையை’ தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொதுக் கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

தொடர்மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியாக இரண்டு குழந்தைகளை கீழே எறிந்து கொன்ற சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பில், குழந்தைகளை…

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை…

ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . வடமராட்சி வல்வெட்டியைச் சேர்ந்த…