சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார்.
ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார்.
இணையத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள் பிரபலமாக உள்ளபோதும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணமாகாத பல இளையர்கள் தொடர்ந்து பாரம்பரிய திருமணத் தரகர்களையே சார்ந்திருப்பதாக அவர் கூறினார்.
கிராமப்புறத் திருமணத் தரகர்கள் வரதட்சணையிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுகின்றனர். திருமணத் தரகர்கள் 3 விழுக்காட்டுக்கும் 5 விழுக்காட்டுக்கும் இடையே கட்டணம் விதிப்பது பொதுவாக நடக்கும் ஒன்று எனக் கூறிய லான், சிலர் 15 விழுக்காடுவரை கட்டணம் விதிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இதனைச் சமாளிக்க, திருமணத் தரகர் சங்கங்கள் அமைக்கப்படவேண்டும் என்று லான் பரிந்துரைத்தார். கிராமப்புறத்தில் உள்ள நிபுணத்துவ திருமணத் தரகர்கள் அவற்றில் பதிவுசெய்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
அதோடு, திருமணத் தரகர் துறையில் முறையற்ற வழியில் லாபம் ஈட்டுவதைத் தவிர்க்க, கண்டிப்பான கண்காணிப்பும், சட்ட அமலாக்கமும் முக்கியம் என்றும் லான் வலியுறுத்தினார்.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.