Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வெட்டப்பட்ட கித்துள் மரம் ஒன்று விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) மாலை ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பலத்த காயமடைந்த நபர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இஸ்கோலவத்த எகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீன நாட்டிற்கு வெளியே சீனர்கள் கலந்து கொள்ளும் மரதனோட்டப் போட்டி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதிவரை ரத்மலானை தொடக்கம் பேருவளை வரையான கடலோரப் பாதையில் குறித்த மரதனோட்டப் போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துக்கொள்ள 3000 சீனர்கள் நாட்டை வந்தடையவுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் மூவர் சிரேஷ்ட பிரஜை ஒருவர் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவமொன்று உயர்நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. கொட்வின் பெரேரா என்ற 81 வயதான சிரேஷ்ட பிரஜை ஒருவரிடமே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. அதேபோன்று, நீதிபதிகள் விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக மனுதாரருக்கும் பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு, கொட்வின் […]
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரதக் கடவை இல்லை என தெரிவித்தும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் தமது கடமையை செய்யவில்லை என குறிப்பிட்டும் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது இதன் போது அவ்விடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் ரயில் வருகின்ற பொழுது அதனை மறித்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது இறந்த உயிரே இறுதியாகட்டும், எங்கள் […]
ஆலங்குடாவை சேர்ந்த முச்சக்கர வண்டி கல்பிட்டி வீதி தலுவ சின்ன பாலத்துக்கு அருகில் கட்டுபாட்டையிலந்த வீதி விட்டு விலகி தலைகீழாக தடம்புரண்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்பட்டுள்ளனர்.
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர். வைத்தியசாலைக்கு நேற்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர். பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து […]
மேஷம் aries-mesham பல வழிகளிலும் பணம் வந்து மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பெண்கள் விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம். ரிஷபம் taurus-rishibum செலவுகள் அதிகரிக்கும் கோபத்தாலும், மனைவியின் கலகத்தால், குடும்பத்தில் குழப்பமும், பிரிவும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வுக்கு வழி பிறக்கும். மிதுனம் gemini-mithunum பெண்களால் இலாபம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். எல்லாவகையிலும் சந்தோஷம் அதிகரிக்கும். […]
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (15.02.2024) பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந் பாராளுமன்ற உறுப்பினர்களது பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் […]
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]