காலி, தடல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்திருந்த நபரொருவர், வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் அவரது மனைவியையும் மகளையும் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் காயமடைந்த 45 வயது மனைவியும் 15 வயது மகளும் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.