கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முசல்பிட்டி பகுதியில் உள்ள குளத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதை மாத்திரைகள் அடங்கிய 27 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் வியாழக்கிழமை (14) இரவு இந்த மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன் மொத்த பெறுமதி பத்து கோடிக்கு மேல் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை, சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.