Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இந்ந பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் கில்மிஷா,போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இத்தகவலை கில்மிஷா தனது முகநூலில் பகிர்ந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் இன்றைய தினம் 07.02.2024மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக 35 லட்சத்துக்கு மேற்பட்ட தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர்பெளசர் மூலம் அயலவர்களின் உதவியோடு உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிர்க்கதியாக நிற்பதாகவ தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மின் இணைப்பு […]
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman Danny K. Davis. இவர்கள் நான்கு பேரும் தமிழர் நிலைமை தொடர்பில் தீவிரமாக அக்கறை செலுத்தியவர்கள். குறிப்பாக முத்த மூன்று Congress உறுப்பினர்களும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் 427 […]
மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ பரவியமையால் தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனம் பளுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர் பவுசர் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் […]
தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாது பின்னடிப்பது தொடர்பிலே சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளியிட்டார். அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்டு வரும் அதேவேளை தேர்தலை மாத்திரம் நடத்தாமல் பின்னடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.
பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கமராவுடனான உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்கமைய இரகசியமான முறையில் கமரா பொருத்தப்பட்ட சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவான 120 அடியை விட 13 அடி குறைந்து இன்றைய தினம் 107 அடியில் நீர் உள்ளது. காசல்ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது ஏனைய நீர்த் […]
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர், அந்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருதொகுதி கலைஞர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதோடு குறிப்பாக தமன்னா, யோகிபாபு, ஹரிகரன் உள்ளிட்ட கலைஞர்களை சந்திப்பதற்காக ஒரு நிகழ்வை நாளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு மணித்தியாலம் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு நுழைவுக்கட்டணமாக 30 […]
06.02.2024 நேற்றையதினம் கொழும்பு மாவட்டம் அவிசாவளை மாதோல இரத்தினபுரி வீதியில் அமைந்துள்ள திரு.கருப்பையா ரமேஷ் என்பவருக்கு சொந்தமான இரும்பு சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் வசிக்கும் 48 வயது உடைய கந்தசாமி ஜெகன் (J.H.Ang 753123768V) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த இடத்தில் இரும்புப் பொருட்களுக்கு இடையே இருந்த பழைய ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் அவர் மரணமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.