Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று (14) இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த இளைஞன் தனது வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செங்குத்தான வீதியிலுள்ள மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்தியவருக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து […]
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் புகையிரத விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்குமாறும் கடவை காப்பாளரை பணியில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இணுவில் பகுதியில் நேற்று (14) மாலை புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரிடம் அப்பகுதியில் நிரந்தர புகையிரத கடவை காப்பாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுடன் இதற்கு முன்னரும் […]
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் […]
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுவையே நாட்டிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 25 இலங்கையர்கள், 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாள பிரஜைகள் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான திகதி இதுவரை […]
புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும் விற்பனை […]
இலங்கையில் முகநூல் தொடர்பில் கடந்த 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல தெரிவித்துள்ளார். இவற்றில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான 10774 சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5188 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7499 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதி […]
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக சுமார் 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இவற்றில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 2,242 முறைப்பாடுகள், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 472 முறைப்பாடுகள், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 404 […]
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையின் விஞ்ஞான ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக குறித்த ஆசிரியர் சுமார் 5 வருடங்கள் கடமையாற்றி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த ஆசிரியர் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அசௌகரியம் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. […]
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். […]