27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

ஒகஸ்ட் 28 முதல் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

சூரியன், தெற்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே செல்லும் என்று  வளிமண்டலவியல்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை 28 ஆம் திகதி மதியம் 12.11 மணியளவில் நெடுந்தீவு பூனகரி, தட்டுவன்கொட்டி மற்றும் சுண்டிக்குளம் ஆகிய இடங்களுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்  என்று  வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது என்பதுடன் மற்றைய இடங்களில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=250&adk=380012252&adf=1099714259&w=320&abgtt=5&fwrn=7&fwrnh=100&lmt=1724821285&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7505841888&ad_type=text_image&format=320×250&url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2F28-august-06-september-direct-solarzenith-srilanka-1724776067%3Fitm_source%3Dparsely-top&fwr=0&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTEuMC4wIiwiIiwiMjExMDMzTUkiLCIxMjYuMC42NDc4LjEyMiIsbnVsbCwxLG51bGwsIiIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTIyIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjIiXV0sMF0.&dt=1724821284107&bpp=8&bdt=3321&idt=9&shv=r20240826&mjsv=m202408260101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D898399cdf1041d64%3AT%3D1711767122%3ART%3D1724821090%3AS%3DALNI_Man2-XHCINefNgsdvChEG6Ip0-HtQ&gpic=UID%3D00000d77f33862d8%3AT%3D1711767122%3ART%3D1724821090%3AS%3DALNI_Mbf775SaV9WPpCyRsOfln8cKRLt3Q&eo_id_str=ID%3D65d590292c2430d7%3AT%3D1711767122%3ART%3D1724821090%3AS%3DAA-AfjYB-FGL_-YQmXcSNiNkc7x1&prev_fmts=0x0%2C320x250%2C320x250&nras=4&correlator=3407903875775&frm=20&pv=1&u_tz=330&u_his=10&u_h=800&u_w=360&u_ah=800&u_aw=360&u_cd=24&u_sd=2&dmc=4&adx=20&ady=2277&biw=360&bih=669&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C44798934%2C95332926%2C95338226%2C31086516%2C95340285&oid=2&pvsid=144342982671323&tmod=1405029603&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Ftamilwin.com%2Fsrilanka&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C669%2C360%2C669&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=9&uci=a!9&btvi=3&fsb=1&dtd=1493

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

இரு சட்டமூலங்கள் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன !

User1

யாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது

sumi

தெற்கு அதிவேக வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து 

User1

Leave a Comment