Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்
எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று (8) தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசுவதை தான் பார்த்ததாக கூறிய கிரியெல்ல, அதிர்ஷ்டவசமாக தோட்டா தனது காலில் விழுந்ததாக தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய லக்ஷ்மன் […]
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மருந்துகளுக்கு அப்பால் ஒட்சிசனும் வழங்கப்படுகின்றது என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: “கெஹலியவின் நோய்க்கு, அவர் அமைச்சராக இருந்த போது, இந்தியாவில் உள்ள நிறுவனத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்தே வழங்கப்படுகின்றது” சிங்கபூரில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள், கெஹலியவுக்கு வழங்கப்படுவதாக வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார் எனவும், ரம்புக்வெலவுக்கு 7 நோய்கள் உள்ளன என்பது […]
தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவமொன்று குருநாகலில் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனைக்கு (ஐஸ் மற்றும் ஹெரோய்ன்) அடிமையாகி இருந்த நபர் ஒருவர் குருநாகல் பஸ் நிலையத்தில் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இந்த நபர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரூ.370 மில்லியன் பெறுமதியான இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவருவதோடு, மற்றைய சந்தேக நபர்கள் 72 வயதுடையவர் எனவும், பிரபல அரசியல் கட்சியொன்றின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தந்தை எனவும் […]
மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண் வைத்தியரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆண் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வைத்தியர் வேறு வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று […]
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்த மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 09 முதல் 10 வரை நடைபெற உள்ளது. இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி வெளியேறியிருந்தார். ஜனாதிபதியுடன் தூதுக்குழுவொன்றும் சென்றுள்ளதுடன், அவர்கள் முதலில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (08) அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு SK-469 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு […]
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிக்குவை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் துப்பாக்கி வழங்கிய நபரே கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி காலை, கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28 ஆயிரத்து 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது வழக்கத்தைவிட அதிகமான தொகை என்று கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர் என சுற்றுலா அபிவிருத்தி […]