Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதினம் (13) கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டானியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துரைத்த தூதுவர், ஈழத்தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள […]
நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நப்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையில் சம தன்மை கொண்ட அதிகாரம் பேணப்பட வேண்டும் என்ற கருத்தும் தனக்கு ஆளமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பருத்துத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்பின்னர் ஊடகங்குக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது […]
வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மைக்ரோ ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் . ருவான்வெல்ல, கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர். இவரிடமிருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதான நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர் இன்று காலை வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டமை தெரியவந்ததுடன் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யதுள்ளார். ஒரே உரிமையாளரின் இரண்டு வர்த்தக நிலையங்களான பல்பொருள் வர்த்தக நிலையமும், விவசாய மருந்து வர்த்தக நிலையத்தின் பின் கதவினை உடைத்து […]
பொலிஸாரின் புதிய புள்ளிவிபரங்களின் பிரகாரம், போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்டு, இணைந்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையத்துடன் அரசு இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 02.10.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணிக்குழு அளித்த பரிந்துரைகளின்படி கற்கை நெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த முன்னோடித் திட்டங்களின் ஒரு பிரிவாக சாதாரண கல்வி முறைமையில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டம் அமுல்படுத்தப்படும். மைக்ரோசொப்ட் ஆதரவுடன் கீழ்க்கண்டவாறு முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. * தேசிய […]
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு மணிவிழா இன்று கொண்டாடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (13) ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று(12) திங்கட்கிழமை மதியம் 1.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த மணிவிழா நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. மணிவிழா நாயகி […]
கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(12) மீட்கப்பட்ட இச்சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கதிரவேல் பத்மராஜ் (வயது 59) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து […]