Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சு மற்றும் சுகாதாரத் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் […]
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவ மாணவிகள் இன்று மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் […]
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும்.. எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க […]
மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் […]
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக மூன்று பாடசாலைக்காக மேன்முறையீடு […]
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, […]
உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் நீராடச் சென்ற கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். ராகம […]
மொரகஹஹேன கோனபொல அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி கூரிய ஆயுதத்தால் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலனுடன் அழகு கலை நிலையத்திற்கு வந்த குறித்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். சந்தேகநபர் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதுடன், அன்றைய தினமே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி பொலிஸ் பாதுகாப்பில் […]
மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கடுமையாக தாக்கப்பட்டதாக (பொலிஸ் பரிசோதகர்) ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் உள்ள மரமொன்றின் அடியிலேயே சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது சுமார் 6 பேர் கொண்ட பொலிஸ் குழு தம்மை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாகவும் அவர்களில் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவதாக அடி வாங்கிய பொலிஸ் பரிசோதகரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் […]
நீண்டகால காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை, காதலி கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கம்பளையில் இடம்பெற்ற நிலையில் அவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 19 வயதுடைய சந்தேகநபரை கம்பளை பதில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கம்பளையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 22 வயதுடைய ஒருவருடன் சில வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களாக காதலன் தன்னை தவிர்ப்பதை அறிந்த இளம்பெண் […]