Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று(08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதன்போது எரிமலையில் இருந்த பாரிய அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறியுள்ளது. நெருப்பு குழம்புகள் குறித்த எரிமலையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியுள்ளதுடன் இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]
வவுனியா புளியங்குளம், பழையவாடியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பண்ணைகாணியில் இருந்து யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்(08) குறித்த காணியில் யானை ஒன்று சடலமாக கிடப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்ததால் அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர். உயிரிழந்த யானை24 வயது மதிக்கத்தக்கது எனவும் சடலம் இன்று உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், அக்காணியின் […]
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்து, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை – மத்தளவுக்கு இடையில் 187 KM பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை (10) முதல் கோரப்பட உள்ளன. மேலும் 400இ000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. ‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தற்போதைய நிலையில் நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை கருதுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாடு தமது தொகுதிக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும், தற்போது ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறுவொரு தலைவர் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சி.வி.இன் இந்த நிலைப்பாடு பரவலாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி காலி மாவட்டம், உடுகம நீதவான் நீதிமன்றத்தின் கழிவறைக்குள் கழிவறையை துப்பரவு செய்ய பயன்படுத்தும் இரசாயனத்தைக் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.