Browsing: இலங்கை செய்திகள்

இலங்கைதீவில் வாழும் முஸ்லிம் சமூகத்திடம் ஞானசார தேரர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 2016ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோருவதாக தேரர் அறிவித்துள்ளார். பொதுப்பல சேனவின் பொதுச் செயலாளரான ஞானசாரதேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுமையான இனவாத கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்திருந்திருந்தன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி ஆலயம் ஒன்றில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட கருத்து அந்த சமூகத்திற்கு மன உளைச்சலை […]

  வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மூன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், தரம் 10 மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கிய  நயம் பரீட்சை வினாத்தாளை வடமாகாண கல்வித் திணைக்களம் அனுப்ப மறந்ததால் பரீட்சை மண்டபங்களில் நேற்று ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10ஆம் தர மாணவர்களுக்கான தொகுதிப் பாடங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம் இரண்டாவது பகுதிப் பரீட்சை நேற்றையதினம்(15) காலை  இடம்பெறுவவிருந்தது. இதன்போதே வடமாகாணக் கல்வித் […]

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை […]

பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என கருதுவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சி பேதங்களை […]

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இக்கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்போது நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்புடன் இன்றையதினம் (16) இடம்பெறுகிறது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இக்கூட்டம் காலை 9 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கூட்டத்தில் […]

மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும், இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்.   -இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன் தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே  (15:02:2024) அபுதாபி பயணமாகினார் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை […]

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக (கிளினிக்) தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த கீர்த்தி பண்டார என்ற 43 வயதுடைய நபரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த ஜீப் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கல்வெட்டில் மோதி மீண்டும் வீதியை நோக்கி வந்ததில் […]

மன்னார் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் மன்னார் தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி […]

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி; சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி; தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அதிபர் அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.