தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை காரணமாக ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எச்சரித்துள்ளார்.
நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் திசைகாட்டி, தனது உண்மையான பொருளாதார கொள்கையை நாட்டுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கெஸ்பேவவில் (Kesbewa) நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் முடியும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும்
மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, இன்று வந்திருக்கும் தலைவர்கள் அன்று எங்கிருந்தார்கள்? என்னால் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. மக்கள் வரிசைகளில் நிற்பது எனக்கு வருத்தமளித்தது. அதனால் பிரதமர் பதவியை ஏற்றுகொண்டேன்.
எவரிடமிருந்தும் நான் பதவியை பறித்தெடுக்கவில்லை. பின்பு நான் ஜனாதிபதியாகினேன். இன்று தட்டுப்பாடுகள் இல்லை. வரிசைகளும் இல்லை. ரூபாய் வலுவடைந்திருக்கிறது.
பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சியடைகிறது. பொருளாதாரத்தை நிலைப்படுத்த வேண்டும். அதற்கு இன்னும் நான்கு வருடங்கள் தேவைப்படும்.
அதற்காகவே மக்களின் ஆணை கேட்கிறேன். இப்பகுதி மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. நெருக்கடிகள் அதிகரித்தாலும் மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. கஷ்டங்களுக்கு மத்தியிலேயே நாட்டை கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
மக்களுக்கு நிவாரணம்
2023 இலிருந்து வற் வரியை அதிகரிக்க நேரிட்டது. நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என்ற நம்பிக்கையிலேயே அதனை செய்தோம்.
பொருட்களின் விலை இன்று குறைந்திருப்பதால் மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கிறது. மக்களின் கஷ்டங்களை நாம் அறிவோம்.
முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திசாநாயக்கவும் சஜித்தும் என்ன சொல்கிறார்கள்? அவர்கள் எம்மோடு தொடர்புபடவில்லை என்கின்றனர்.
எம்மை விரட்டிவிட்டு அதிகாரத்தை அவர்களிடம் தருமாறு கேட்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிப்பதால் என்ன நடக்கும்?
ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும். 370 அதிகரிப்பை தாங்க முடியாத மக்களால் 420 ஐ தாங்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்ட இடைவௌி 400 மில்லியன் ரூபாயாகக் காணப்படுகிறது.
அதனை செயற்படுத்தினால் டொலரின் பெறுமதி 470 ரூபாய் வரையில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
அவ்வாறு நடந்தால் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும்.
மக்கள் மத்தியில் குரோதம்
எம்மைத் திருடர்கள் என்று சொல்பவர்கள். எதற்காக மக்களிடம் பொய் சொல்கிறார்கள்? நாம் திருடர்களை பிடிப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
மோசடியால் திரட்டிய சொத்துக்களை கையகப்படுத்தக்கூடியசட்டமூலத்தையும் தயாரித்திருக்கிறோம்.
எனவே அவர்கள் மக்களிடம் பொய் சொல்கிறார்கள். அவர்கள் கூறும் பொருளாதார முறை தவறானது. மக்கள் மத்தியில் குரோதத்தை தூண்டிவிட்டே திசைக்காட்டிக்கு வாக்குகளை கோருகிறார்கள்.
எனவே திசைக்காட்டிக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருப்பவர்கள் முதலில் அவர்களின் ஆட்சியில் ரூபாயின் பெறுமதியைத் தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களியுங்கள் என