Browsing: இலங்கை செய்திகள்

கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் உள்ள ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் அமைந்துள்ளது மதுபான உற்பத்தி நிலையம் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் குளவி கூடு கட்டி உள்ளது. அந்த பகுதியில் தற்போது கடும் வெப்பமான காலநிலை தோன்றுவதால் எந்த நேரமும் அந்த அஞ்சல் பெட்டியில் உள்ள குளவிகள் அப் பகுதியில் செல்லும் நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நிழற்குடை பகுதியில் நிற்பவர்களை தாக்க கூடும் ஆகையால் அந்த குளவி கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட […]

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) […]

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள்  ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் நேற்று  14.02.2024 சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர், விளையாட்டு அலுவலர், இளைஞர் கழக அலுவலர் சிறுவர் பிரிவு அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மக்கள் […]

இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை (15) முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதன் பின்னர் ஆணைக்குழு ஒன்றுகூடி கட்டணத்தை குறைப்பதற்கு […]

  2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்து நாட்களுக்குள் மூன்று தடவை ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் (RAH) உதவியை நாடிய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் தோற்று பரவலின் போது ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையின் உதவியை 23 வயதுடைய இலங்கை பிரஜையான சசிந்தா பட்டகொடகே எனும் இளைஞர் கோரியுள்ளார். குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னதாக இருமல் மற்றும் இரத்த வாந்தி எடுத்துள்ளதாக வைத்தியர்களிடம் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டி இந்த […]

கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக […]

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த  குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம உத்தியோகத்தராவார். 35 வயதுடைய பெண் கிராம உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி இந்த பெண் கிராம உத்தியோகத்தரின் வீட்டிற்கு சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்  […]

இலங்கையின் 76வது சுதந்திர தின நாளில் லண்டனில் தமிழர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக தமது அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திடம் முறையிடவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு தெரிவிக்கவுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர் […]

வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சைத் தாளில் வினாக்கள் இடம்பெறாமையினால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ் மொழிமூல கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட இவ்வாறான தவறுக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அலட்சியமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் இருபது வருடங்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமே இந்நாட்டில் பதவியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து கருத்துரைத்த அவர்; ”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார். இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டவர் என்ற புதிய […]