தலவாக்கலை – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்கு உட்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தோட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கழிவு முகாமைத்துவம் தொடர்பில் கற்பிக்கும் நோக்கில் அகரபத்தனை, ஹோல்புரூக் நகரில் ஒரு நாள் செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.
வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை முகாமைத்துவம் செய்தல், கழிவு நீரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்பன தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சுகாதார திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மண் அரிப்பு, டெங்கு கட்டுப்பாடு போன்றன தொடர்பாக முன்பள்ளி, இளம் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டி. ரிஷினி கூறினார்.
நுவரெலியா மாநகர சபையின் பிரதம பொது சுகாதார அதிகாரி எம். கே. ஹேரத், நுவரெலியா பிராந்திய சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ. எம். கே. மதுசங்க உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.