Browsing: Uncategorized

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது  பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி,கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் மற்றும் அம்பகாமம் தச்சடம்பன், ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் […]

கிளிநொச்சி, தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை கோரைமூட்டை பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர், தருமபுர பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் 05.02.2024கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும்   கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்  இன்றைய தினம் 06.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்  என தருமபுரம்  பொலீஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று(6) யாழ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த […]

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார். அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. -இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை புதன்கிழமை (7) காலை தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு […]

தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் – சாவல்கட்டு மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரை சந்தித்த சாவல்கட்டு மீனவர்கள் தமது பிரச்சினைகளை தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து ஆளுநர் செயலக நுழைவாயிலை மறித்து நுழைவாயில் முன்பாக அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். தாங்கள் ஆளுநரை சந்தித்த பின்னரே போராட்டத்தை […]

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் கல்லூரி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி […]

வடமராட்சி கெருடாவில் பகுதியில் கணவர் இன்றி ஒரு மகனுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கு  குழாய்க்கிணறும்   நீர்த் தொட்டியும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது கனடாவில் வாழ்ந்து வரும் நாகலிங்கம் நாகபாஸ்கரன் என்பவரது நிதிப்பங்களிப்புடன் இந்த நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது . கெருடாவில் பகுதியைச் சேர்ந்த பொருண்மியம் நலிவுற்ற மற்றுமோர் குடும்பத்திற்கு டென்மார்க் அன்பர் முன்வந்து வழங்கிய நிதியில் கடந்த ஞாயிறு அன்று (4)நீர்த்தொட்டி அமைத்துக் கையளிக்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்  மைக்கல் நேசச்கர அமைப்பினர் இந்த உதவிகளை வழங்கிவைத்தனர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான…

வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் -…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதர்களின் அன்றாட வீண் விரைய செலவினங்களை தவிர்க்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.…