விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் கடந்த 23ஆம் திகதி பிற்பகல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இந்த மாணவி தனது தோழியுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இதன்போது, தோழி காப்பாற்றப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவி நீரில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காணாமல்போன பாடசாலை மாணவியின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட தோழி சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் காதல் உறவுக்குப் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மாணவி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.