Browsing: Uncategorized

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்று கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஐந்து நாள்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க உள்ளிட்ட குழுவினர் நேற்றைய இறுதி நாளில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நிலவும் கேரளாவிற்கு சென்றிருந்தனர். இதன்போதுஇ தொழில் மற்றும் சட்டம் தொடர்பிலான அமைச்சர் பி.ராஜிவினை சந்தித்துள்ளனர்.

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை (10) முதல் கோரப்பட உள்ளன. மேலும் 400இ000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. ‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

07ஆவது இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்தார். இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம்இ சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர். இதேவேளைஇ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் […]

இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கில் ஜேர்மன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில், ஈழ அரசியல் பரப்பை முன்னிறுத்திய அவரது அடுத்தகட்ட செயல்நோக்குகள் குறித்து தாம் கரிசனையோடிருப்பதாக தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட கிராமிய  கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடாத்தினர். இதன்போது, மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர்கள், அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இதனை சபைக்கு அறிவித்த சபாநாயகர் மேலும் கூறுகையில், 2024 சனவரி 23 ஆம் திகதிய எனது அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 சனவரி 24 ஆம் […]

உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரச வங்கிகள் மூலம் 1300 மில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக் கொண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் அதனை மீளச் செலுத்த தவறியுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்இ மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவை நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பாக அந்த வங்கிகள் மூலம் விவசாயத்துறை […]

கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த பொங்கல் உற்சவத்தின் போது மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரவசதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (9) ஆலய முன்றலில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர்,  உதவி மாவட்ட […]

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு “அறுதி உறுதிப்பத்திரம் வழங்கல்” நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட […]