குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம் நேற்று(22) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலேகா ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளன.
கொட்டாவ பிரதேசத்தில் மூத்த கலைஞர்களுக்கான 108 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.