Browsing: Uncategorized

புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு , மூன்று தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்டதோட்டக் காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானைகள் வாழ்வாதாரப் பயிர்களான நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இம்மக்கள் தமது […]

தாம் எதிர்கொள்ளும் இறங்குதுறைப் பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்.சாவல்கட்டு மீனவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரிடம் கலந்துரையாடி சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக ஆளுநர் தமக்கு உறுதியளித்துள்ளதாக மீனவர்கள் ஊடகங்களுக்கு தெவித்துள்ளனர். இறங்குதுறை பிரச்சினைக்கு தீர்வு கோரி சாவல்கட்டு மீனவர்கள் கடந்த 06ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக […]

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலில் இருந்தும் கன்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பாரந்தூக்கிகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது. கப்பலில் இருந்து தரைக்கு இறக்கும் மிகப்பெரிய 12 கிரேன்கள் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முதற்பகுதியாக 3 கிரேன்கள் கடந்தவாரம் இலங்கைக்கு வந்துசேர்ந்தது. 12 ( sts ) கிரேன்கள், 40 ரயிலுக்கு ஏற்றும் தானியங்கி கிரேன்கள், பெட்டிகளை சுமந்து செல்லும் கெரியர்கள் என்பன 282மில்லியன் டொலருக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. குறித்த பாரம்தூக்கிகள் கிழக்கு முனையத்தில் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  […]

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின்  இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 01.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், நாளை 09.02.2024  தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 10.02.2024 மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். தேர்த்திருவிழாவுக்காக, பல்வேறு இடங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 பெப்ரவரி 7 ஆம் திகதி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ‘சமர் அலி’  – ‘லிகான் ஓமா’ ஆகிய இருவருடனும் –  அதன் பின்னர் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ‘டொன் டேவிஸ்’ என்பவருடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.  காங்கிரஸ் உறுப்பினர்களான சமர் அலி  – லிகான் ஓமா ஆகிய இருவரும் அமெரிக்காவின் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் மிகவும் முற்போக்குவாத இளம் அரசியல் தலைவர்களாவர். இளைஞர்கள் மட்டத்தில் […]

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார். […]

யாழ்ப்பாணம் றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள பொதுக்கிணத்தில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குளிப்பதற்கு சென்ற பொழுது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீசருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலையில் காயம் ஒன்று காணப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ,அருளானந்தம் அமலதாஸன் 55 […]

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் இன்றைய தினம் 07.02.2024மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக 35 லட்சத்துக்கு மேற்பட்ட தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர்பெளசர் மூலம்  அயலவர்களின் உதவியோடு  உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிர்க்கதியாக நிற்பதாகவ தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மின் இணைப்பு […]

தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்தாது பின்னடிப்பது தொடர்பிலே சுரேஷ் பிரேமச்சந்திரன், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது கருத்தினை வெளியிட்டார். அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொண்டு வரும் அதேவேளை தேர்தலை மாத்திரம் நடத்தாமல் பின்னடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மவுஸ்சாக்கலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவான 120 அடியை விட 13 அடி குறைந்து இன்றைய தினம் 107 அடியில் நீர் உள்ளது. காசல்ரீ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 அடி குறைந்து உள்ளது ஏனைய நீர்த் […]