Browsing: விளையாட்டுச்

மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும், இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்.   -இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன் தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே  (15:02:2024) அபுதாபி பயணமாகினார் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை […]

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.ராமச்சந்திரன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர், வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் நடுவர் சங்க தலைவர் என பலரும் கலந்து […]

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன், கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையில் பகலிரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற மாபெரும் ஆண்/பெண் கபடி சுற்றுப்போட்டிகள் 10,11.2.2024 கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெற்றிருந்தன. ஆண்கள் 1ம் இடம் முத்தமிழன் விளையாட்டு கழகம், 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகம். பெண்கள் 1ம் இடம் பாலிநகர் […]

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகினார். மனச்சோர்வு ஏற்பட்டதால் குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்து தொடரில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் […]

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் பதிவு செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 37 வயதான வார்னர், கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் […]

இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப […]

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (09) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. பகல் – இரவு ஆட்டமாக இடம்பெறும் இன்றைய போட்டி பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில்இ அதில் 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையேஇ டெஸ்ட் போட்டியைப் போன்று […]

இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடைபெறும் மூன்று, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரம் விராட் கோலி விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 7 முதல் தர்மசாலாவில் தொடங்கும் 5 ஆவது டெஸ்டியிலும் கோலி விளைாயடுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய முதல்தர நட்சத்திரம் கிரேக் ஹோவர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.