Browsing: நாடு

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீசா தொடர்பான மீறல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுவையே நாட்டிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 25 இலங்கையர்கள், 83 பங்களாதேஷ் பிரஜைகள், 46 இந்திய பிரஜைகள் மற்றும் 08 நேபாள பிரஜைகள் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதற்கான திகதி இதுவரை […]

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (10) இரவு நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகியதுடன், ​​7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றினார். மேலும், பல நாடுகளின் அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்

ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தொழிலை இழந்த நிலையில் இன்று (09.02.2024) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஜோர்தானில் இத்தொழிற்சாலைகளை நடத்தி வந்த இரண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு கிடைத்த சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதே தொழிற்சாலையில் பணிபுரிந்த மற்றுமொரு இலங்கை குழுவினர் […]

ஜோர்தானில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது வேதனம் வழங்கப்படாமல் சிரமத்திற்குள்ளான இலங்கைச் சேர்ந்த 66 தொழிலாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குறித்த 66 தொழிலாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.