Browsing: திருகோணமலை

திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆளுநரின் செயல். மாற்றுத்திறனாளிகள் எனப்படுவோர் தமது தேவைகளுக்கு குடும்பங்களையே எதிர்பார்த்து வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு பல தடைகளையும் சிரமங்களையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வண்ணம் மதிப்புக்குரிய கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது எல்லா தேவைகளுக்கும் குடும்பங்களை நம்பியே காலம் தள்ளியே இவர்களின் முழு வாழ்க்கையுமே மாற்றி அமைக்கும் அளப்பெரிய உதவியாகும். இந்த நிகழ்வில் […]

மட்டக்களப்பிலிருந்து டயலோக் நிறுவன ஊழியர்கள் பயணித்த கார் மூதுரில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில்  திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. டயலொக் நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கையில் குறித்த கார் பாதையை விட்டு விலகியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் […]

திருகோணமலை மாவட்ட ‘Trincomalee Super 40’ கிரிக்கெட் கழத்தின் ஏற்பாட்டில் ‘Battle of East – 2024’  ற்கான இரண்டாவது மென்பந்து  சுற்றுப் போட்டியை கடந்த 10 மற்றும் 11ம் திகதிகளில் திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் திரு.மார்ட்டீன் G.ஜெயகாந்த் தலைமையில் சிறப்பாக நடாத்தி முடித்தனர். ‘Trincomalee Super 40’  மற்றும் ‘ ‘Batticaloa Masters’ ஆகிய கழகங்களுக்கிடையில் இரண்டு நாட்களில் 20 க்கு 20 ஓவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு போட்டிகள் நடாத்தப்பட்டதோடு அப்போட்டிகளில் இவ்விரு அணியினரும் […]

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே உயரிழந்துள்ளார். குறித்த சிறுவன், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார், அந்தசமயம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் […]

ஜனாதிபதி செயலகம் ஊடாக நடை முறைப்படுத்தப்படும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால் மா பைக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க (06) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த பால் மா பக்கட்டுக்களை பொன்டெறா நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 90 குடும்பங்களுக்கு ஒருவருக்கு […]

மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிசாரின் உத்தரவையும்மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மன்றத்திற்கு சொந்தமான குறித்த காணியை சிலர் பொய்யான ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றார்கள் இது தொடர்பாக மூதூர் பொலிஸ் […]

“அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை” என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட 2 வருடமும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா…

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களில் கடமையாற்றும் மௌலவிகளுக்கான உளவளத் துணை வழிகாட்டல் செயலமர்வொன்று இன்று (01) இடம்பெற்றது. தம்பலகாமம்…