Browsing: சற்று

காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவதினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். 15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் […]

  மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி பற்றி தெரிந்தவர்கள் உடன் மட்டு வைத்தியசாலை செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   மேலதிக விபயங்கள் இணைக்கப்படும்.

வாரியப்பொல, பமுனகொட்டுவ பகுதியில், கலுகமுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. கலுகமுவ வீதியில் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர் அண்மைக்காலமாக கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் இவரை மருதங்கேணி பொலிசார் தேடிவந்தனர்.இன்றும் அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது மனைவி வேறு இடத்தில் […]

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல்மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு மாத்திரம் நீதிமன்றங்களில் 48,391 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க “அத தெரண” வினவிய போது பதிலளித்தார். நிவாரண விண்ணப்பம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விளக்கமளிக்கையில், […]

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பேருந்து யாழ்ப்பாணம் – தென்மராட்சி –  A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் […]