Browsing: இந்திய

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். […]

ராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த   5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், தோப்பின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடல் அட்டை, கஞ்சா, ஏலக்காய், அழகு சாதன பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை […]

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் முற்றியதில் தற்போது அது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் தற்போது இருவர் உயிரிழந்ததுடன் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் வாயிலாக அறிய முடிகின்றது. மேலும், அரச அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து […]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்  ஏற்பாட்டில் ‘இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(15-02-204) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர்  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். -இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார் […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான் மேடியோவில் செவ்வாய்க்கிழமை (13) அவர்களது வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனந்த் சுஜித் ஹென்றி (42), அவரது மனைவி அலைஸ் பிரியங்கா (40) மற்றும் அவர்களது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் (4) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டு காயம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் […]

உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனம் பெரிய செயலிழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் பயனர்கள் X தளத்தில் எழுதியுள்ளனர். செயலிழப்பு குறித்து டவுன் டிடெக்டரில் 2,000க்கும் மேற்பட்ட அறிக்கைகள் காணப்பட்டதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்குள், இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து கிட்டத்தட்ட 5,000 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பெரும்பாலான அறிக்கைகள் லண்டன், மான்செஸ்டர் மற்றும் லிவர்பூலில் இருந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தாய்லாந்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த […]

சதொச விற்பனை வலையைமைப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மீண்டும் விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த சில வாரங்களாக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விற்றுத் தீர்ந்த நிலையில் சதொச விற்பனை நிலையங்களில் இந்திய முட்டைகள் விற்பனை இடைநிறுத்தப்பட்டிருந்தது.