Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அதிகரிப்பு
இலங்கையில் இருதய நோயாளர்கள் பதிவாகின்றமை திடீரென அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது. கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட மேலதிக கொடுப்பனவு அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார ஆரம்பத்தில் இருந்து வழங்கப்படும் என பதில் நிதியமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி, இதுவரையில் கிடைத்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு விரைவாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 28 ஆயிரத்து 493 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரியாக நாளொன்றில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இது வழக்கத்தைவிட அதிகமான தொகை என்று கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு மொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 639 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர் என சுற்றுலா அபிவிருத்தி […]
இன்று (ஜனவரி 31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல்…