28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எரிபொருள்கள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இன்று (ஜனவரி 31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 371 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 456 ரூபாயாகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 05 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 363 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு 07 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாயாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாகும்.

Related posts

விசுவமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

sumi

எரிபொருள் தட்டுபாடு-வெளியான புதிய சிக்கல்..!

sumi

கிழக்கு ஆளுனர் தமிழர்களின் இருப்பை பாதுகாக்கவும், திருக்கோணேஸ்வர விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் 

User1

Leave a Comment