• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

selvan by selvan
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!
Share on FacebookShare on Twitter

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’வின் தரப்பிடமிருந்து 1200 இலட்சம் (12 கோடி) ரூபா இலஞ்சத்தைப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரையும், வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதூன் சிந்தக்கவை சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வருவதற்காக, அவரது மனைவியிடமிருந்து 1200 இலட்சம் ரூபாவை முற்பணமாக இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சரின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சத்துரங்க ஆகிய மூவரும் விளக்கமறியல் காலம் நிறைவடைந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேற்படி சந்தேகநபர்கள் மூவரும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

தலவாக்கலையில் மிஹிந்து மஹா பெரஹரா நிகழ்வு

by selvan
July 3, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்து மஹா பெரஹரா விழா நாளையதினம் காலை 6.00 க்கு தலவாக்கலை நகரில் ஆரம்பமாக உள்ளது. பாரம்பரிய கலைகளையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில் 50-க்கும்...

நீதிமன்றில் முன்னிலையானார் வவுனியா மாநகரசபை முதல்வர் காண்டீபன்!

நீதிமன்றில் முன்னிலையானார் வவுனியா மாநகரசபை முதல்வர் காண்டீபன்!

by selvan
July 3, 2026
0

வவுனியா மாநகர சபை மேயரின் ஆடை, பதக்கம் மற்றும் சபையின் செங்கோல் ஆகியவை காணாமல்போனமை தொடர்பான விவகாரத்தில் மேயர் காண்டீபனின் பெயரும் பொலிஸாரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில்...

வவுனியா மேயரைப் பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை!

வவுனியா மேயரைப் பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை!

by selvan
July 3, 2026
0

வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபனை மேயர் பதவியில் இருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த வர்த்தமானி உத்தரவுக்கு...

காலையில் கைதான வசந்த கரன்னாகொட மாலையில் பிணையில் விடுவிப்பு!

காலையில் கைதான வசந்த கரன்னாகொட மாலையில் பிணையில் விடுவிப்பு!

by selvan
July 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் கடற்படைத் தளபதி...

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் புதிய மாடிக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா

by selvan
July 3, 2026
0

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாகாணத்துக்காகக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ்,...

அனைத்துத் துறைகளிலும் அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

அனைத்துத் துறைகளிலும் அரசு முற்றாகத் தோல்வி அடைந்துள்ளது!

by selvan
July 3, 2026
0

தேசிய மக்கள் சக்தி அரசானது டெங்கு ஒழிப்பு, நீதித்துறை வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளது என்று ஐக்கிய...

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு!

by selvan
July 3, 2026
0

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின்...

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற பச்சிலைப்பள்ளி அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

by selvan
July 3, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது இவ் பிரதேச...

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

இலங்கை கராத்தே சங்கத்தில் பாரிய பண மோசடி; விளையாட்டுத்துறை அமைச்சர் வேடிக்கை.!

by Mathavi
July 3, 2026
0

இலங்கை கராத்தே சங்கத்தில் இடம்பெற்று வரும் பெருமளவிலான பண மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து கொழும்பில் நேற்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்...

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

சொந்தமாகக் குடியிருப்பு நிலம் இல்லாமையால் மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
July 3, 2026
0

கிளிநொச்சி மாவட்டம், வண்ணாங்கேணி வடக்கு கிராமத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி