• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 3, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தவிக்கும் நாடு – சம்பள உயர்வை வழங்குமாறு அரசுக்கு மொட்டுக் கட்சி அழுத்தம்.!

Mathavi by Mathavi
July 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தவிக்கும் நாடு – சம்பள உயர்வை வழங்குமாறு அரசுக்கு மொட்டுக் கட்சி அழுத்தம்.!
Share on FacebookShare on Twitter

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அரச ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரும் அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் கூட இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அரசு ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு ஒரு ‘தேவதைக் கதைகள்’ அடங்கிய புத்தகத்தையே வழங்கியது. அந்தப் புத்தகத்தில் வளமான நாடு, அழகான வாழ்க்கை போன்ற மிக அழகான கனவுகள் இருந்தன. அத்தகைய பொன்னான நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் உயரிய நிலையை அடைந்து நாடு பெரும் அபிவிருத்தியைக் காணும் என்றே கூறப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக இன்று அரச ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக 20 கிலோ அரிசியைக் கடனாகப் பெற வேண்டிய நிலையை அரசே உருவாக்கியுள்ளது. அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியை வழங்கி அவர்களின் சேவையை அரசு சிறுமைப்படுத்துகின்றது.

நாட்டின் 80 வீதமான அரச ஊழியர்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்தே இந்த அரசுக்கு வாக்களித்திருந்த நிலையில், அவ்வாறான அரச ஊழியர்களை இவ்வாறு அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்குத் தேவை பிச்சை எடுக்கும் வகையிலான கொடுப்பனவுகளோ அல்லது கடன்களோ அல்ல, மாறாக தங்களது சேவைக்கான மரியாதையும் முறையான சம்பள உயர்வும் ஆகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உயர்த்தப்படும் என அரசு அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது கூறியது. ஆனால், இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதே சம்பள உயர்வு பற்றிப் பேசப்படுவதால், இந்த ஜூலை மாதத்தில் இருந்தாவது அரச ஊழியர்களின் சம்பளத்தை ஆகக்குறைந்தது 15 ஆயிரம் ரூபாவினாலாவது உயர்த்த வேண்டும். திறைசேரி நிரம்பி வழியும் அளவுக்குப் பணம் இருப்பதாக அரசு கூறுமாயின், அதனை மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.

அத்துடன், நெல் கிலோவொன்றை 150 ரூபாவுக்குக் கொள்வனவு செய்வதாகக் கூறி, விவசாயிகளை கோமணம் அணிவித்து கொழும்புக்கு வரவழைத்து வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இன்று விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். அரசு அன்று எதிர்க்கட்சியில் இருந்து கூறிய வாக்குறுதிகள் இன்று அவர்களுக்கே பாரிய எதிரொலியாக மாறியுள்ளன.

எங்களது ஆட்சிக் காலத்தில் கொவிட் பெருந்தொற்று மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், அரச ஊழியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓரளவு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் விளைச்சலைத் தகுந்த விலைக்குக் கொள்வனவு செய்து அவர்களுக்கு எமது அரசு பலம் சேர்த்தது.

திறைசேரி நிரம்பி வழிகின்றது என்றால், விவசாயிகளிடம் 150 ரூபாவுக்கு நெல்லைக் கொள்வனவு செய்து, ஏழை மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டுமே தவிர, மக்களுக்கு முன்னால் விசித்திரக் கதைகளைக் கூறி விநோதம் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை.

மேலும், வறுமையை ஒழிப்பதற்கான பிரதான திட்டமாக இருந்த சமுர்த்தித் திட்டத்தை இந்த அரசு பழிவாங்கும் நோக்குடன் கைவிட்டுள்ளது. தற்போது ‘அஸ்வெசும’ திட்டம் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதிலும் தகுதியற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் வறுமை அதிகரிக்கும் போது நிவாரணங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர, அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது. எனவே எதிர்க்கட்சியில் இருந்தபோது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தற்போதாவது இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.” – என்றார்.

Related Posts

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

பெற்றோலை 131 ரூபாவாலும் டீசலை 101 ரூபாவாலும் உடனடியாகக் குறைக்க முடியும்.!

by Mathavi
July 3, 2026
0

மக்களுக்கு உணரும் படியாக எரிபொருள் விலையைக் குறைப்பதாகப் பொய் வாக்குறுதி அளித்த திசைகாட்டி அரசாங்கம், 'மலையைக் கிண்டி எலியைப் பிடித்த கதையாக' மிகச் சொற்ப அளவிலேயே விலையைக்...

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

by Mathavi
July 3, 2026
0

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின்...

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம்; தடுக்கவே புதிய சட்டமூலங்கள்.!

by Mathavi
July 3, 2026
0

நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நாட்டை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டே புதிய திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என இலங்கை...

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பாரவூர்தி.!

by Mathavi
July 3, 2026
0

கொழும்பு - கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த பாரவூர்தி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாலை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்; யார் ராஜா என்று பார்த்துவிடுவோம்.!

by Mathavi
July 3, 2026
0

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் என்றும், நாட்டு மக்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் அநுர...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்.!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்.!

by Mathavi
July 3, 2026
0

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை...

அரசை அபாண்டமாகத் தாக்காதீர்கள்; மனிதாபிமானத்தோடு அணுகுங்கள்.!

அரசை அபாண்டமாகத் தாக்காதீர்கள்; மனிதாபிமானத்தோடு அணுகுங்கள்.!

by Mathavi
July 3, 2026
0

சுயநல நோக்கோடு அரசின் மீது அபாண்டமான தாக்குதல்களை நடத்துவதை விடுத்து, அரசு இன்று எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை ஓரளவுக்கு மனிதாபிமானத்துடனும் அனுதாபத்துடனும் அணுகிப் பேச வேண்டும் என்று...

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

by Mathavi
July 3, 2026
0

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது...

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

மக்களுக்குப் பொய் மூட்டை; அநுர அரசை கிழித்தெறிந்த ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
July 3, 2026
0

அநுர அரசு ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டினார். எதுல்கோட்டேயிலுள்ள...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

by selvan
July 2, 2026
0

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கிளிநொச்சி நகர எல்லைக்குள் உள்ள ஒரு குழு கடை உரிமையாளர்களுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி