• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
நாட்டின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக பதிவானது செம்மணி.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக மேலும் 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி மனிதப் புதைகுழி பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட இப்புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற அகழ்வாய்வின் போது, புதிதாகச் சிறுவர்களின் மூன்று என்புத் தொகுதிகள் உட்பட 14 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தூய்மைப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. மேலும், குழந்தை ஒன்றினது என்புத் தொகுதி மற்றும் சிறுவர் ஒருவரினுடைய என்புத் தொகுதி உட்பட மொத்தமாக 5 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் இதுவரை மொத்தமாக 380 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 362 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை பல்வேறு காலகட்டங்களில் 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய புதிய கண்டுபிடிப்பை அடுத்து, இலங்கையின் மனிதப் புதைகுழி வரலாற்றில் செம்மணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் முதலிடத்திலிருந்த ஏனைய புதைகுழிகளின் விவரங்கள் வருமாறு:-

  • மன்னார் சதொச மனிதப் புதைகுழி (இரண்டாவது இடம்)
    கடந்த 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 28 சிறுவர்களின் என்புத் தொகுதிகள் உட்பட 376 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை இரண்டாவது பெரிய புதைகுழியாகக் காணப்படுகின்றது.
  • மாத்தளை மனிதப் புதைகுழி (மூன்றாவது இடம்)
    கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இப்புதைகுழியில் 155 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 45 நாட்களும், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் நேற்று வரை 27 நாட்களும் என மொத்தமாக இதுவரை 81 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மீது தாக்குதல்; ஒருவர் கைது.!

by Mathavi
June 18, 2026
0

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்த காணொளி ஒன்று தொடர்பாக, மதவாச்சி பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 09ஆம் திகதி மதவாச்சி பகுதியில் உள்ள...

யுவதி ஒருவர் சடலமாக மீட்பு.!

யுவதி ஒருவர் சடலமாக மீட்பு.!

by Mathavi
June 18, 2026
0

கண்டி மாவட்டம், பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச்...

செம்மணி புதைகுழி அகழ்வு; ஒரு எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இரும்புப் பொருள்.!

செம்மணி புதைகுழி அகழ்வு; ஒரு எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் இரும்புப் பொருள்.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு,...

பொலிஸாரின் அதிரடி வேட்டை; சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்.!

பொலிஸாரின் அதிரடி வேட்டை; சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்.!

by Mathavi
June 18, 2026
0

சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல கோடி ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ்...

உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

மாத்தறை மாவட்டம், அத்துரலிய பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 70 வயது முதியவர் ஒருவர்...

குடும்பம் குடும்பமாகக் கொ*ல்லப்பட்டு புதைப்பு; சர்வதேச ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.!

குடும்பம் குடும்பமாகக் கொ*ல்லப்பட்டு புதைப்பு; சர்வதேச ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித என்புத் தொகுதிகளை, அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும்...

எரிபொருட்களின் விலையை குறைப்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை!

எரிபொருட்களின் விலையை குறைப்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை!

by selvan
June 18, 2026
0

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலைகளைக் குறைக்க தற்போதைக்கு சாத்தியமில்லை என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த...

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி – 26 பேர் கைது

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி – 26 பேர் கைது

by selvan
June 18, 2026
0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம்...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !

by selvan
June 17, 2026
0

யாழ்ப்பாணம், மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று விஜயம் செய்திருந்தார். இதன்போது முன்னாள் வடக்கு...

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

செம்மணி இந்து மயானத்தை தமிழன அழிப்பின் நினைவகமாக பேணுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது

by selvan
June 17, 2026
0

செம்மணி சித்துபாத்தி இந்து மயானம் தமிழன அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனால் இன்றைய சபை அமர்வில் முன்மொழியப்பட்டது. குறித்த முன்மொழிவினை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி