• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இன்னும் நான்கு மாதங்களில் அரசியல் களம் அதிரடியாக மாற்றியமைக்கப்படும்.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்.
0
இன்னும் நான்கு மாதங்களில் அரசியல் களம் அதிரடியாக மாற்றியமைக்கப்படும்.!
Share on FacebookShare on Twitter

“நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சி போதியளவு பலமாகச் செயற்படாததால், அதற்கு வெளியே புதிய மக்கள் சக்தியைத் திரட்டவுள்ளோம். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தகுந்த வியூகங்களுடன் தற்போதைய அரசியல் களம் அதிரடியாக மாற்றியமைக்கப்படும்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை ஊடகங்களுக்கு விசேட கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்குக் குறிப்பிடுகையில்,
“நாடாளுமன்றத்துக்குள் தற்போதைய எதிர்க்கட்சியானது போதியளவு பலமாகச் செயற்படவில்லை. இதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்க்கட்சிக் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இதற்கமைய, நாடாளுமன்றத்துக்கு வெளியே பரந்தளவிலான மக்கள் சக்தியைத் திரட்டும் காத்திரமான பணிகளை நாம் மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் எத்தகைய பிரதிநிதிகள் வர வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். அதனைத் தீர்மானிக்கும் இறுதி உரிமையை மக்களிடமே விட்டுவிட வேண்டும். குறிப்பாக, நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

அரசு நாடாளுமன்றத்தில் வெவ்வேறு சட்டமூலங்களை முன்வைத்து, தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது.

மாகாண சபை என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். தற்போதைய ஆளுங்கட்சியினர் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது, அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில்லை என்று நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டினர். எனவே, இன்று அவர்கள் மக்களுக்கு வழங்கிய ஜனநாயக வாக்குறுதிகளை நிறைவேற்றி, உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டால், நான் மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கி நிச்சயம் வெற்றிபெற்றுக் காட்டுவேன். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிகள் சிதறிப்போயுள்ளதாகக் கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் தகுந்த அரசியல் வியூகங்களுடன் களம் இறங்கத் தயாராகி வருகின்றோம். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தால், இந்த நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களம் எவ்வாறு மாறுகின்றது என்பதை அனைவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அதற்கான சரியான அடித்தளத்தை அமைக்கும் பணிகளில் தற்போதைய எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரைமறைவில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.” – என்றார்.

Related Posts

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

முதியோர் இல்லத் தீ விபத்து – உரிமையாளர் கைது!

by selvan
June 4, 2026
0

ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

by selvan
June 4, 2026
0

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர்...

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

by selvan
June 4, 2026
0

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று  மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  ஊடக சந்திப்பினை   நடாத்தியிருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பிரீஸ்...

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின  நிகழ்வுகள்..

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள்..

by selvan
June 4, 2026
0

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின்...

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

by selvan
June 4, 2026
0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து A9வீதியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்...

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

by selvan
June 4, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

by selvan
June 4, 2026
0

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

by selvan
June 4, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்....

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

by selvan
June 4, 2026
0

களுத்துறை மாவட்டம், ஹொரணை - அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

by selvan
June 4, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி