• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மக்கா வெறுப்பை வளர்க்கும் இடமல்ல; மனிதாபிமானத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனிதத் தளமாகும்.!

Mathavi by Mathavi
June 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
மக்கா வெறுப்பை வளர்க்கும் இடமல்ல; மனிதாபிமானத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனிதத் தளமாகும்.!
Share on FacebookShare on Twitter

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு, ஒற்றுமை மற்றும் மனிதாபிமானத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனிதத் தளமாகும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பருவத்தின் போது அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் மௌலவி அவர்கள் மினா பகுதியில் சவூதி பாதுகாப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், தனது எல்லைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் உரிமை சவூதி அரேபியாவிற்கு இருப்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும், செல்லுபடியாகும் விசாவின் கீழ், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஒதுக்கீட்டின் கீழ் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அவரது தாய்நாட்டின் இராஜதந்திர பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி தனது கடமைகளின் அடிப்படையில் செயல்பட்ட நிலையில் அவர்மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளுக்குப் பதிலாக, இலங்கையும் சவூதி அரேபியாவும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்துடனும், ரியாத் மற்றும் ஜெத்தாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனும் இணைந்து முழுமையான அறிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், அஷ் ஷெய்க் அர்கம் நூராமித் மௌலவி அவர்கள் தனிப்பட்ட முறையில் அல்லாது, அதிகாரப்பூர்வ அரசாங்கக் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட்டார் என்பதையும் சவூதி அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொடர்பு முறைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, ஹஜ் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பட்டியலையும் முன்கூட்டியே பரிமாறிக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

“மக்காவின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது சவூதி அரேபியாவின் பொறுப்பு; அதேவேளை தனது குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் மரியாதையைப் பாதுகாப்பது இலங்கையின் பொறுப்பு. இந்த இரண்டிற்கும் இடையில் மோதல் அல்ல, புரிந்துணர்வும் உரையாடலுமே நிலவ வேண்டும்” என கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளையும் பரஸ்பர மரியாதையையும் பேணும் வகையில், இவ்விவகாரம் உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts

மீகொடையில் 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!

மீகொடையில் 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த விபத்தை ஏற்படுத்திய நபருக்கு விளக்கமறியல்!

by selvan
June 1, 2026
0

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (01)...

புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

by selvan
June 1, 2026
0

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தொடருந்துகள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 9.30...

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!

by selvan
June 1, 2026
0

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் (Trial-at-Bar) முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5 வீதத்தினால் அதிகரிப்பு!

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5 வீதத்தினால் அதிகரிப்பு!

by selvan
June 1, 2026
0

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5 வீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

செம்மணியில் இன்றும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

செம்மணியில் இன்றும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

by selvan
June 1, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இன்றையதினம் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதுடன் நாளையதினமும்...

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம்  வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!

by selvan
June 1, 2026
0

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு...

யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது !

யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது !

by selvan
June 1, 2026
0

யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. குறித்த நீதிபதியின் இடமாற்றத்துக்கும்...

நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

by selvan
June 1, 2026
0

WASPAR திட்டத்தின் சார்பில் YWP - இளம் நீர்வாண்மையாளர் வடக்கு வட்டத்தினர் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். நயினாதீவின் நன்னீர்வளம் பற்றிய முதற்கட்ட பார்வையிடலை நோக்கமாகக் கொண்டு இக்...

வடக்கில் நீதித்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன!

வடக்கில் நீதித்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன!

by selvan
June 1, 2026
0

யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று...

யாழில். தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

யாழில். தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

by selvan
June 1, 2026
0

தவறுதலாக நெருப்புக்குள் விழுந்து தீக்காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். சுழிபுரம் கிழக்குப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி