உலகக் கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் போது ஈரான் காற்பந்தாட்ட அணி தமது நாட்டில் தங்குவதற்கு மெக்சிக்கோ அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) இதனை உறுதி செய்துள்ளார்.
அமெரிக்கா இதற்கு மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்தே மெக்சிகோ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஈரான் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் அணியின் தங்குமிடம் அமெரிக்காவின் அரிசோனாவுக்குப் பதிலாக, மெக்சிகோவின் எல்லை நகரமான டிஜுவானாவில் (Tijuana) அமைக்கப்படவுள்ளது எனக் கூறினார்
உலகக் கிண்ணத் தொடருக்காக ஈரான் அணி அமெரிக்காவில் தங்குவதற்கு அந்தநாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்த நிலையிலேயே, மெக்சிகோ ஜனாதிபதி இந்த அனுமதியை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Posts
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்”
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது "புதிய வடிவ அடிமைத்தனம்" என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ஆம் லியோ விமர்சித்துள்ளார். பூகோள அரசியல் மற்றும் வர்த்தக...
ஈரானில் இணையக் காட்டுப்பாடுகளை நீக்க உத்தரவு
ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் (Internet) கட்டுப்பாடுகளை நீக்கி, இணைய வசதியை மீண்டும் சீரமைக்குமாறு அந்தநாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உத்தரவிட்டுள்ளார். ஈரானின் தொடர்பாடல் அமைச்சின்...
இரு சர்வதேச எரிவாயுக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்துள்ளதாக தகவல்
இயற்கை எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி,...
பாகிஸ்தானில் வீதி விபத்து – 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும்...
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்ததுள்ளது. ஷென்சோ-23 (Shenzhou-23) என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. Shenzhou-23 திட்டம் சீன...
இராட்சத நச்சுத் தாங்கி வெடிக்கும் அபாயம் – 50 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒரேன்ச் கவுண்டியில் (Orange County) உள்ள விண்வெளி உற்பத்தி ஆலையில் நச்சுத் தாங்கி ஒன்று வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘மெத்தில் மெதக்ரிலேட்’...
ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே சிறந்தது!
ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த தேர்வாகும் என ஈரானின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.ஈரானின் செய்திச்...
உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய வீரர் உயிரிழப்பு!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து பணியாற்றிய பிரித்தானிய தன்னார்வப் போராளி ஒருவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.டெவோனைச் சேர்ந்த 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன்...
பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயணித்த விசேட புகையிரதம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு.!
அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்....










