• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!

Mathavi by Mathavi
May 24, 2026
in உலக செய்திகள்
0
பாகிஸ்தானில் இராணுவத்தினர் பயணித்த புகையிரதம் மீது குண்டுத் தாக்குதல்; பலர் உயிரிழப்பு.!
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில், இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயணித்த விசேட புகையிரதம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கி இராணுவ வீரர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் ஏற்றிச் சென்ற புகையிரதமே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

புகையிரதம் குவெட்டாவின் சாமன் பட்டாக் பகுதியில் உள்ள சமிஞ்கை ஒன்றைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் ஒரு பெட்டி மீது மோதி வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஏஃவ்பி செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த அதிபயங்கர வெடிப்பின் தாக்கத்தினால் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சத்தத்தினால் சுற்றியுள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. அத்துடன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஈத் பெருநாளை முன்னிட்டு, விடுமுறையைக் கழிப்பதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணித்த இராணுவ வீரர்களே இந்தத் கொடூரத் தாக்குதலில் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவ வீரர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த 50க்கும் மேற்பட்டோரில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் வைத்தியசாலை வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் அரசாங்க அதிகாரி பாபர் யூசுப்சாய் கருத்துத் தெரிவிக்கையில், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகவும், அதேநேரம் நாட்டின் மிக ஏழ்மையான மாகாணமாகவும் பலுசிஸ்தான் விளங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் இம்மாகாணம் மிகவும் பின்தங்கியுள்ளது.

இங்குள்ள கணிசமான இயற்கை எரிவாயு இருப்புக்கள் மற்றும் கனிம வளங்களை உள்ளூர் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் வழங்காமல் பாகிஸ்தான் அரசாங்கம் சுரண்டுவதாக பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருவதுடன், பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

Related Posts

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு.!

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு.!

by Mathavi
May 24, 2026
0

அமெரிக்க நேரப்படி நேற்று (23) மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்....

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!

80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!

by selvan
May 23, 2026
0

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் மூலம், ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டை விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கு விஞ்ஞானிகள் 'டைலோசாரஸ் ரெக்ஸ்' (Tylosaurus rex)...

மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!

மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!

by selvan
May 23, 2026
0

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுவேலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் ஒப்பனையாளரால் தாக்காப்பட்டுள்ளார். தான் தங்கியிருந்த உணவகத்தின்...

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!

by selvan
May 23, 2026
0

பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்...

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

by selvan
May 23, 2026
0

அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக...

சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து – 82 பேர் பலி!

சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து – 82 பேர் பலி!

by selvan
May 23, 2026
0

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்,...

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

by selvan
May 23, 2026
0

சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட,  அல்பினோ எருமை மன அழுத்தத்தால் உடல் எடை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுகுறித்த எருமை பிரபலமடைந்ததிலிருந்து, அது...

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!

by selvan
May 23, 2026
0

மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப்...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

by selvan
May 22, 2026
0

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுஅதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது முன்னைய விலையுடன்...

போலந்திற்கு  மேலதிகமாக 5,000 படையினரை அனுப்ப அமெரிக்கா திட்டம்

போலந்திற்கு  மேலதிகமாக 5,000 படையினரை அனுப்ப அமெரிக்கா திட்டம்

by selvan
May 22, 2026
0

போலந்திற்கு  அமெரிக்கா  மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப்,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி