தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது.
முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது பிரதமர் மோடி,மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே ஆகியோரை அவர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Posts
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்!
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று...
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய அரசு தனது குடிமக்களுக்கு உத்தரவு!
ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் ஈரான் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானின் எச்சரிக்கையை...
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை!
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள்...
பா.ஜ.க.விலிருந்து விலகினார் கே. அண்ணாமலை!
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அண்ணாமலை இராஜினாமா செய்ததை பாஜகவின் தேசியத் தலைவர் நிதின்...
டெல்லியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்!
டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என...
தமிழ்நாட்டிற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
125 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி 4.1% ஆக குறைக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது...
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து
கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு, தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கர்நாடக...
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு!
வட பீகாரில் உள்ள முசாஃபர்பூரின் பிரம்மபுரா பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்று (04) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில்...
டெல்லியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து – 21 பேர் உயிரிழப்பு!
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின்...
நேபாளத்துடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!
நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா மற்றும் ஐக்கிய...









