மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தற்போது கடும் மூடுபனி நிலவி வருகிறது.
இதனால் வீதியின் தெளிவுத்தன்மை மிகவும் குறைவடைந்துள்ளதால் வாகனப் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள என போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் நுவரெலியா பிரதான சாலையில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பிரிவின் உயர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் ஹட்டன் – கண்டி, ஹட்டன் – கொழுப்பு, ஹட்டன் நகரில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கன மழை பெய்து வருவதால் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது ஆகையால் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.












