• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

Mathavi by Mathavi
May 13, 2026
in இலங்கை செய்திகள்.
0
நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
Share on FacebookShare on Twitter

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது.

காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் இன்று அதிகாலை 2.00 மணி முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

இப் பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்களும் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பாதசாரிகள் வீதியில் நடந்து செல்ல முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நுவரெலியா வலப்பனை, கொத்மலை, ஹங்குராகெத்த, ராகலை, பூண்டுலோயா, டயகம, தலவாக்கலை, கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை, நோட்டன், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன், வட்டவளை, தியகலை, கர்லினா, கினிகத்தேனை, பிட்டவல ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளில் மழையுடன் கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் உள்ள மின்குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை செலுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் டிட்வா சூறாவளியில் ஏற்பட்ட மண்சரிவுகள் தற்போது தொடர் மழை காரணமாக மீண்டும் சரிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பண்ணையாளர்கள் விவசாய தொழில் ஈடுபடுபவர்களும், அன்றாட கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

ஹட்டன் பகுதியில் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையின் காரணமாக பொலித்தீன்கள் மற்றும் பிலாஸ்ரிக் போத்தல்கள் கால்வாய்களில் அடைத்து மழையின் போது வீதியில் மழைநீர் வழிதோடுவதால் ஹட்டன் பகுதியில் காணப்படும் பல குறுக்கு வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அன்றாடம் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்திய போதிலும் சரியான தீர்வுகளை பெற்றுக் கொடுக்காததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஹட்டன் – வட்டவளை பிரதான சாலை அருகே முன்னைய வாடி வீடு அமைந்துள்ள பகுதியில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை கொட்டுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் போதும், நடந்து செல்லும் போதும் துர்நாற்றம் வீசுவதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு.!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு.!

by Mathavi
May 13, 2026
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தற்போது கடும் மூடுபனி நிலவி வருகிறது....

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!

by Mathavi
May 13, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை...

பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
May 13, 2026
0

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!

by Mathavi
May 13, 2026
0

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது...

கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 13, 2026
0

உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து நேற்று (12) மாலை புதிதாக திருமணமான இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட சடலம், உடப்பு, பெரியபாடு...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!

by Mathavi
May 13, 2026
0

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல - பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை (13) காலை பாடசாலை மாணவர்களை...

போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!

போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!

by Mathavi
May 13, 2026
0

சட்டவிரோதமாக "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று புதன்கிழமை(13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு...

சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!

சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!

by Mathavi
May 13, 2026
0

நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட...

அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!

by Mathavi
May 13, 2026
0

தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செவ்வாய்க்கிழமை(12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு.!

ஜனாதிபதிக்கு எதிராக ஐ.நா.வில் முறைப்பாடு.!

by Mathavi
May 13, 2026
0

மே தினப் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா. மனித உரிமைகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி