• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!

Bharathy by Bharathy
May 9, 2026
in இந்திய செய்திகள்
0
தவெக-வுக்கு இடதுசாரிகள் ஆதரவு ; ஆளுநரைச் சந்தித்தார் விஜய் – 118-ஐ எட்ட இன்னும் 2 இடங்களே தேவை!
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆதரவுக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்தார்.

நேற்று மாலை 7 மணி அளவில் ஆளுநரைச் சந்தித்த விஜய், இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய கட்சிகள் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதங்களை ஒப்படைத்தார்.

அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் உடனிருந்தனர். ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 118 ஆகும். அதன்படி, தற்போதைய நிலவரப்படி: மொத்தமாக 116 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.


தவெக (108 – 1 ராஜினாமா):107 உறுப்பினர்கள்.
காங்கிரஸ் ஆதரவு: 05 உறுப்பினர்கள்.
CPI மற்றும் CPIM ஆதரவு: 04 உறுப்பினர்கள் (தலா 2).
மொத்த பலம்: 116 உறுப்பினர்கள்.


இதன் மூலம் பெரும்பான்மையை எட்ட இன்னும் 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே விஜய்க்குத் தேவைப்படுகிறது.இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தவெக-வுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான தகவலை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முடிவு மிகவும் தீர்மானிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. இது தொடர்பாகத் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்த தனது இறுதி முடிவை இன்று அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருமுறை விஜயைச் சந்தித்த ஆளுநர், 118 உறுப்பினர்களின் பட்டியலை முழுமையாகச் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதில் உறுதியாக உள்ளார். எனவே, விசிக-வின் 2 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால் மட்டுமே விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான வாய்ப்பு உருவாகும்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அதிகாரப் போட்டி, இன்று காலை விசிக வெளியிடவுள்ள அறிவிப்போடு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!

by Bharathy
May 9, 2026
0

உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு...

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

by Bharathy
May 9, 2026
0

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய...

காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

காணாமல் போன MLA ; நள்ளிரவில் பரபரப்பு – விஜய்க்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு!

by Bharathy
May 9, 2026
0

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக...

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

by Bharathy
May 8, 2026
0

தமிழகம் ஒரு சிக்கலான அரசியல் சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை, அதாவது 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் கட்சி, ஆட்சி அமைக்க...

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

ஒருவரைத் தடுக்க ஒன்றுபடும் வாழ்நாள் எதிரிகள்?

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிந்தைய இழுபறி மேலும் தீவிரமடைந்துள்ளது. திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்று ஆட்சி அமைக்க முயன்றால், தங்களது 107 சட்டமன்ற...

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

107 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்வார்கள் என டி.வி.கே எச்சரிக்கை!

by Bharathy
May 8, 2026
0

தமிழகத்தில் மு.க. ஸ்டாலினின் திராவிர முன்னேற்றக் கழகம் (திமுக) அல்லது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரு...

மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!

மக்கள் வழங்கிய ஆணையை மதியுங்கள்!விஜயைப் பதவியேற்க அனுமதியுங்கள்!!

by Bharathy
May 7, 2026
0

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும்...

118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்;  இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

118 கையெழுத்துக்களுடன் திரும்பி வாருங்கள்; இரண்டாவது நாளாகவும் விஜய்யை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

by Bharathy
May 7, 2026
0

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் முன்வைத்த ஆட்சி அமைக்கும் திட்டத்தை தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று 6 ஆம்...

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கின்றார் விஜய்!

by Bharathy
May 6, 2026
0

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்...

தவெகவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் – தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்!

தவெகவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் – தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்!

by Bharathy
May 6, 2026
0

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையை நிரூபித்து எப்போது ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி